Summer: உங்க வீட்டில் Water Purifier இருக்கா...? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க...
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு, கரூர், திருப்புத்தூர் போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.
வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்பாக பொது இடங்களில் மோர், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணமாக தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், RO Water Purifier-ஐ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்றும், தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மெயின் பில்டர் பழுதாகிவிடும் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். தேவையான அளவிற்கு காலையிலேயே தங்களது வீடுகளில் தண்ணீரை Purifier என்ன செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.