மக்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? எத்தனை முறை UPI பரிவர்த்தனை செய்யலாம்..?
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. மூன்றாம் தரப்பு UPI செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு 10 முறை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் UPI ஆப்கள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனையில் இந்தியாவுக்கு கனிசமான பங்கு உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பரவலாக பயன்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு பிறகான காலத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முக்கிய பங்காற்றி வருகிறது.
இப்போதெல்லாம் பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவது அதிகரித்துவிட்டது. ஆனால், அந்த செயலிகளில் ஒரு நாளைக்கு எவ்வளவு பரிவர்த்தனை செய்யலாம்..? எத்தனை முறை பரிவர்த்தனை செய்யலாம் என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் விதிப்படி, குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் உள்ளன. உதாரணத்திற்கு ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது, தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு, ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. மூன்றாம் தரப்பு UPI செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு 10 முறை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : OTT-இல் மிஸ் பண்ணிடாத தரமான காமெடி படங்கள்..!! சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது..!!