For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீங்க அடிக்கடி இந்த மாதிரி ஆகுறீங்களா..? தினசரி இதை மட்டும் பண்ணுங்க..!! எல்லாம் பறந்துபோயிரும்..!!

Do at least 150 minutes of moderate-intensity aerobic activity per week or 75 minutes of vigorous-intensity activity, along with strength-training exercises at least 2 times per week.
10:23 AM May 30, 2024 IST | Chella
நீங்க அடிக்கடி இந்த மாதிரி ஆகுறீங்களா    தினசரி இதை மட்டும் பண்ணுங்க     எல்லாம் பறந்துபோயிரும்
Advertisement

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நிலையானது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒரு தீவிரமான சுகாதார நிலையாகும். எனினும், ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் BP அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுத்து சீராக வைத்து கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கைத் தரம் மற்றும் பொது நல்வாழ்வை மேம்படுத்தி உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க உதவும் சில முக்கியமான ஆரோக்கிய வாழ்க்கை முறை பழக்கங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

தினசரி ஒர்கவுட்: வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மாடிரேட்-இன்டன்சிட்டி ஏரோபிக் ஆக்டிவிட்டி அல்லது 75 நிமிட தீவிர ஆக்டிவிட்டிஸ்களுடன், வாரத்திற்கு 2 முறையாவது தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான டயட்: உங்களது தினசரி உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ப்ரோட்டீன் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஆரோக்கியமான எடை: உயரத்திற்கு ஏற்ப இல்லாமல் கூடுதல் எடையுடன் இருப்பது அல்லது பருமனாக இருப்பது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. எப்போதும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

புகைப்பழக்கம் வேண்டாம்: புகைப்பழக்கமானது நம்முடைய ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிகோடின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.

அளவாக மது அருந்துங்கள்: உங்களுக்கு மது பழக்கம் இருந்தால் எப்போதும் மிதமான அளவில் அதனை பருகுங்கள். பெண்கள் ஒரு நாளைக்கு 1 ட்ரிங், ஆண்கள் ஒரு நாளைக்கு 2 ட்ரிங்ஸ்களையும் அருந்தலாம்.

மனஅழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்: மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது யோகா போன்ற மனம் மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளில் தினசரி ஈடுபடலாம்.

போதுமான அளவு தூக்கம்: தினசரி இரவு 7-9 மணிநேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். இதற்கும் குறைவான நேரம் தூங்கும் பழக்கம் நம் உடலின் ரத்த அழுத்த அளவுகளை எளிதில் பாதிக்கும். மேற்கண்ட பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.

மருத்துவ சோதனைகள்: குறிப்பிட்ட சீரான இடைவெளியில் உங்கள் வீட்டிலேயோ அல்லது மருத்துவ நிபுணரிடம் சென்றோ உங்கள் ரத்த அழுத்த அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதும், சூழலுக்கு ஏற்ப அவர் வழங்கும் பரிந்துரைகளை பின்பற்றுவதும் நன்மைகளை அளிக்கும்.

Read More : ஜூன் 3ஆம் தேதி வானில் நிகழும் அதிசயம்..!! வெறும் கண்களில் பார்க்கலாம்..!!

Tags :
Advertisement