வயிறு நிறைய சாப்பிட்டாலும் உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா..? ஆபத்து..!! என்ன செய்ய வேண்டும்..?
வயிறு நிறைய சாப்பிட்டாலும், உடனே பசியெடுக்கிறது என்றால் இந்த 5 தவறுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.
பொதுவாக நன்றாக பசி எடுத்த பின்பு சாப்பிட்டால் தான் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரியான முறையில் உடலில் சேரும் என்று சொல்வார்கள். எனவே, காலை, மதியம், மாலை, இரவு என ஆரோக்கியமான, சமநிலையான ஊட்டச்சத்துகளை உடலுக்கு அளிக்கும் உணவுகளை சரியாக சாப்பிடுவதால் சரியான நேரத்திற்கு பசியெடுக்கும். மன அழுத்தத்தில் இருந்தாலோ, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை மேற்கொண்டாலோ பசி எடுக்காமல் இருக்கும். இதனால் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் முடியாமல், உடலில் பிரச்சனை ஏற்படும்.
சாப்பிட்ட பின்பு உங்களுக்கு மீண்டும் பசியெடுக்கிறது என்றால், உடம்பில் நீர்ச்சத்து போதுமான அளவில் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும் போது சிறிது தண்ணீர் அருந்தலாம். அதிக உடற்பயிற்சி செய்தால் உடம்பிற்கு நிறைய கலோரிகள் தேவைப்படும். ஆதலால், சரியான அளவில் புரதம் மற்றும் நார்ச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்.
இதேபோல், வேக வேகமாக சாப்பிட்டாலும், சாப்பிட்ட உடன் பசி ஏற்படும். வேகமாக சாப்பிடுவதை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வாயில் உணவை நன்றாக சவைத்து, உமிழ்நீருடன் அதை கூழாக்கி அதை முழுங்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் பசி ஏற்படாது. ரத்தத்தில் சர்க்கரை மேலும் அதிகரித்தால் பசியெடுத்துக் கொண்டே இருக்கும். எனவே, ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி சீராக இருக்கின்றதா என்பதையும் பரிசோதித்து கொள்ளவும். காலை உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து இவை இரண்டு ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லையென்றாலும் உங்களுக்கு பசி ஏற்படுவதுடன், நொறுக்கு தீணிகளை சாப்பிட்டு உடல் எடையும் அதிகமாகும்.
Read More : தமிழ்நாட்டை குளிர்விக்கப் போகும் மழை..!! அடுத்த 6 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் சம்பவம் இருக்கு..!!