அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிக்க தோணுதா..? இதில் எவ்வளவு ஆபத்து இருக்குன்னு தெரியுமா..?
நீர் என்பது மிகவும் அவசியமானது. அதுவும் வெயில் காலத்தில் தாகத்தை தணிக்க நாம் அதிக நீரை குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியூட்டுவது போல தோன்றினாலும், குளிர்ந்த நீர் உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும். அந்தவகையில், வெயில் காலத்தில் குளிர்ந்த நீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
குளிர்ந்த நீரை திடீரென உட்கொள்வது உடலை அதிர்ச்சிக்குள்ளாக்கும். இதனால் இரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழி வகுக்கும். குளிர்ந்த நீர் வயிறு மற்றும் குடலில் உள்ள தசைகளை சுருங்கச் செய்வதன் மூலம் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். இதன்மூலம், அசௌகரியம், வயிறு வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குளிர்ந்த நீர் விரைவாக உடலில் நீரேற்றம் ஆகாது. உடலால் மெதுவாகவே உறிஞ்சப்படும். குளிர்ந்த நீரை குடிப்பது சுவாச மண்டலத்தில் சளி உற்பத்தியை தூண்டும்.
சுவாசம் சார்ந்த பிரச்சனை கொண்டவர்கள் குளிர்ந்த நீரை அதிகமாக பருகினால் சளியும் அதிகமாகி மூக்கு ஒழுகுதல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உணர்திறன் வாய்ந்த பற்கள் கொண்ட நபர்கள் குளிர்ந்த நீரை குடிப்பது, பல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் குளிர்ந்த நீரை பருகுவது தசை வலி அல்லது தசைப்பிடிப்பை அதிகப்படுத்திவிடலாம்.
குளிர்ந்த நீரை தொடர்ந்து பருகுவது, காலப்போக்கில் வளர்சிதை மாற்றத்தின் செயல்திறனை பாதிக்கலாம். குளிர்ந்த நீரை பருவதால் உண்டாகும் குளிர்ச்சியான வெப்பநிலை, உடலை அழுத்தத்திற்கு உள்ளாக்கி, எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாக்கலாம். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறு சார்ந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் குளிர்ந்த நீரை குடித்த பிறகு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Read More : ’யப்பா சாமி தலையே சுத்துது’..!! ஒரே குடும்பத்தில் 1,200 பேர்..!! வாக்களிக்க 350 பேர் தகுதி..!!