தோட்டத்திற்குள் கிடந்த 2 சடலங்கள்..!! அருகில் பூச்சி மருந்து, தண்ணீர், பூ, உணவு பொட்டலங்கள்..!! அடையாளம் கண்டு ஆடிப்போன கிராம மக்கள்..!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியை ஒட்டியுள்ள கோட்டூர் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது, மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் ஆண் மற்றும் பெண் ஆகியோரது உடல் கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விஏஓ பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து உறுதி செய்தார். அங்கு வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கையில் கத்தியுடன் கிடந்தார். அருகில் கிடந்த பெண்ணுக்கு அருகில் பூச்சி மருந்து பாட்டில், தண்ணீர் பாட்டில், பூ மற்றும் உணவு பொட்டலங்கள் இருந்தது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி 32 வயதான ஜீவா என்பதும், அவருக்கு அருகில் பிணமாக கிடந்ததது சகாயராஜ் மனைவி ஆலிசா (30) என்பதும் தெரியவந்தது.
ஆலிசாவின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் ஜீவா கூலிவேலை செய்து வந்தார். அப்போது, அவருக்கும் ஜீவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்ததால், அவமானம் தாங்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஜீவா தனக்குதானே கத்தியால் கழுத்தை அறுத்து உயிரைவிட்டதும், ஆலிசா பூச்சி மருந்தை குடித்து உயிரை விட்டதும் தெரியவந்தது. உயிரைவிட்ட ஆலிசாவுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். ஜீவாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த வெளிநாட்டவர்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!