For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலையில் எழுந்ததும் காஃபி குடிப்பவரா நீங்கள்..? என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

Coffee is the first drink that most people drink when they wake up in the morning. But do you know that you should not drink coffee in the morning..? Let's find out the reasons why in this post.
01:53 PM Sep 06, 2024 IST | Chella
காலையில் எழுந்ததும் காஃபி குடிப்பவரா நீங்கள்    என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா
Advertisement

காலையில் எழுந்ததும் பலரும் அருந்தும் முதல் பானம் காஃபி. ஆனால் காலை நேரத்தில் காபி அருந்த கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா..? அது ஏன் என்பதற்கான காரணங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

Advertisement

அமிலத்தன்மை : வெறும் வயிற்றில் காபியை தவிர்ப்பதற்கான முக்கிய காரணம் அதிக அமிலத்தன்மை. வெறும் வயிற்றில் காபி குடிக்கும்போது, செரிமான அமைப்பைத் தூண்டி அமில அளவை அதிகரிக்க செய்யும். காபியில் உள்ள காஃபின் இரைப்பையில் அமிலம் உற்பத்தியில் அதிகரிப்பை தூண்டுகிறது. இது நெஞ்செரிச்சல், வீக்கம், ஏப்பம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

ரத்த சர்க்கரை அளவு பாதிப்பு : காலை நேரத்தில் காபி குடித்தால், இரத்த சர்க்கரை அளவுகளில் ஒரு மறைமுகமான தாக்கம் ஏற்படும். வெறும் வயிற்றில் காபி குடிப்பதால், திடீரென குளுக்கோஸ் குறையும், இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கம் காணலாம். இது உங்கள் ஆற்றலை பாதிக்கும் மற்றும் நாள் முழுவதும் உங்கள் மனநிலையை பாதிக்கும்.

பதற்றம் : காஃபின் உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, உங்கள் மனநிலையையும், கவனத்தையும் பாதிக்கும். காலையில் காபி குடிப்பது, உங்களுக்கு உற்சாகத்தை தருவதாக தோன்றினாலும், அது பதற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதே உண்மை. உங்கள் நாளை அமைதியாகவும், சீரானதாகவும் வைத்திருக்க காலை உணவுக்கு பின்னர் கூட காபி குடிக்கலாம்.

ஊட்டச்சத்தை உறிஞ்சுதல் பாதிப்புகள் : காபியின் அமிலத்தன்மை மற்றும் காஃபின் செரிமானத்தை பாதிக்கலாம். இது உங்கள் காலை உணவில் இருந்து முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உறிஞ்சப்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, வெறும் வயிற்றில் காபி அருந்துவதை தவிர்த்து விடுங்கள். இதேபோல தூங்க செல்வதற்கு முன்னரும் காபி அருந்த கூடாது. தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு உங்கள் கடைசி காபியை நிறுத்திக்கொள்வது நல்லது.

Read More : விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி வழிபட வேண்டும்..? உகந்த நேரம் எது..?

Tags :
Advertisement