For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க இதை மறக்காம பண்ணுங்க..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Mental health should be given the same importance as physical health.
10:31 AM May 29, 2024 IST | Chella
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க இதை மறக்காம பண்ணுங்க     சூப்பர் டிப்ஸ் இதோ
Advertisement

மனிதராக பிறந்த எல்லோருக்கும் வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. வாழ்க்கையே கணினி மயமாகி வருவதால் மக்களுக்கு மன அழுத்தத்திற்கு பஞ்சமில்லை. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மன ஆரோக்கியத்திற்கும் கொடுக்க வேண்டும்.

Advertisement

புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்: எப்போதும் நம்மை உயிர்ப்பாக வைத்துக்கொள்ள புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் இது உதவும். ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது, தானாகவே புதிய மனிதர்களின் அறிமுகம், நட்பு கிடைக்கும். ஆனால், எதுவாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்ததை மற்றும் கற்றுக்கொள்ளுங்கள்.

மனம் விட்டு பேசுங்கள்: தற்போதைய ஆன்லைன் உலகத்தில் யாரும் பிறருக்காக நேரம் ஒதுக்கவோ, மனம் விட்டு பேசவோ விரும்புவதில்லை. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என உங்களுடன் அன்பாக இருப்பவர்களுடன் சேர்ந்து நேரில் நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களுடன் உணவருந்துவது, வெளியே செல்வது, அன்றைய தினம் நடந்த விஷயங்களை பகிர்வது போன்றவற்றை செய்யலாம்.

பரிசளிப்பதும் இன்பமே: யாராவது நமக்கு பரிசு கொடுத்தால் அது எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதேபோல் தான் பிறருக்கு நீங்கள் பரிசளிக்கும் போது அதே அளவு மகிழ்ச்சியை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என யாருக்காவது சின்ன, சின்ன பரிசுக்களை கொடுத்து குஷிப்படுத்துவதோடு, போனஸாக மகிழ்ச்சியையும் பெறலாம்.

உடற்பயிற்சி: சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மனஆரோக்கியத்திற்கும் நல்லது. நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது நமது மன நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடந்த காலத்திற்கு குட்பை: “நடந்து முடிந்த விஷயங்களை எப்போதும் மாற்ற முடியாது. ஆனால், அவற்றை நிச்சயம் கடந்து செல்ல முடியும்”. எப்போதோ செய்த தவறை எண்ணி இன்று வரை வருந்துவதில் எவ்வித பயனும் இல்லை. அதேபோல் எதிர்காலத்தை நினைத்தும் கவலை அல்லது பயம் கொள்வது தேவையற்றது. எனவே, எப்போதும் மனதை நிகழ் காலத்தில் வைத்திருங்கள். அப்போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

Read More : ஆபாசமாக கேள்வி கேட்ட வீடியோவை அனுமதியின்றி பதிவேற்றிய யூடியூப் சேனல்..!! இளம்பெண் விபரீத முடிவு..!! VJ ஸ்வேதா உள்ளிட்ட 3 பேர் கைது..!!

Tags :
Advertisement