For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கூகுளில் நீங்களும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமா..? இந்த ஈசியான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Did you know that you can earn up to Rs.1 lakh with Google..? Yes, this post explains how.
02:13 PM Oct 24, 2024 IST | Chella
கூகுளில் நீங்களும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமா    இந்த ஈசியான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
Advertisement

தற்போது அனைத்து மொபைல் போன்களிலும் கூகுள் என்பது இடம்பெற்றுள்ளது. கூகுள் கையில் இருந்தால், நம்மால் அனைத்து வேலைகளையும் ஈசியாக முடித்துவிட முடியும். ஆனால், இந்த கூகுளை வைத்து நீங்கள் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்பது தெரியுமா..? ஆம், அது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

அதாவது, உங்களது கட்டுரைகளை கூகுளில் வெளியிடுவதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம். இதற்கு நீங்கள் ரூ.600 முதலீடு செய்ய வேண்டும். கூகுளின் விதிகளைப் பின்பற்றி தினமும் உங்கள் இணையதளத்தில் கட்டுரைகளை எழுத வேண்டும். உங்கள் கட்டுரைகள் கூகுள் தேடலில் ட்ரெண்ட் செய்தால், Google Adsense கணக்கை உருவாக்குவதற்கான அனுமதி உங்களுக்கு கூகுள் தரப்பில் இருந்து வழங்கப்படும்.

அனுமதி கிடைத்தவுடன் உங்கள் இணையதளத்திற்கு விளம்பரங்கள் காட்டப்படும். அதன் பிறகு நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். கூகுள் இணையத்தை உருவாக்கி கட்டுரை அல்லது ப்ளாக் தினமும் எழுதுங்கள். கூகுள் இணையத்தை உருவாக்குவதன் மூலம் முழுநேர அல்லது பகுதி நேரமாக கூட எழுதத் தொடங்கலாம்.

600 ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.1 லட்சம்...

கூகுளில் கட்டுரை எழுதுவதற்கு முன் நீங்கள் ரூ.600 மட்டும் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் டொமைன் பெயர், ஹோஸ்டிங் வாங்கலாம். கூகுளில் இருந்து டொமைன் பெயரை வாங்கி ஹோஸ்டிங் செய்த பிறகு புதிய இணையதளத்தை உருவாக்கலாம். ​​உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை இணையதளத்தில் பதியலாம். கூகுளின் இலவச டூல் ப்ளாக்கரைப் பயன்படுத்தி, இலவசமாக ஒரு டொமைன் பெயரை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், இது ஹோஸ்டிங் இல்லாத டொமைன் பெயரை மட்டுமே வழங்கும்.

பிறகு, டொமைனை வாங்கி ஹோஸ்டிங் செய்த பிறகு, வேர்ட்பிரஸில் ஒரு வலைத்தளத்தை உருவாக்க வேண்டும். இதனால், நீங்கள் கூடிய விரைவில் பணம் சம்பாதிக்கலாம். இணையதளம் தயாரான பிறகு, இந்த இணையதளத்தில் தேவைக்கேற்ப அல்லது வசதிக்கேற்ப தினசரி புதிய தகவல்கள், செய்திகள், அரசுத் திட்டம், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட செய்திகளை எழுதலாம். தொழில்நுட்பம் தொடர்பான முக்கியமான கட்டுரைகளை எழுதி வெளியிடலாம். உங்கள் கட்டுரை வர்த்தக செய்திகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

உங்கள் கட்டுரையை எஸ்சிஓ (SEO) மூலம் மேம்படுத்தினால், இணையதளத்தில் சிறந்த ரிசல்ட் கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் இணையதளத்தில் அதிகமான விளம்பரங்கள் கிடைக்கும். நீங்கள் எழுதும் சுவராஸ்யமான கட்டுரைகள், தகவல்களைப் பொருத்து உங்களுக்கென்று பார்வையாளர்கள் உருவாகிவிடுவார்கள். அதிமானோர் உங்களது தளத்திற்கு படிப்பதற்காக வருவார்கள். அதிகமான வியூவ்ஸ் பெறுவதால், உங்கள் கட்டுரைகளும் தரவரிசைப்படுத்தத் தொடங்குகின்றன. மேலும், உங்கள் கணக்கை Google Adsense கணக்காக மாற்றலாம்.

கூகுள் ஆட்சென்ஸ் கணக்கிற்கு அனுமதி பெற, உங்கள் இணையதளத்தின் பெயரை உள்ளிட்டு, கூகுள் ஆட்சென்ஸில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே உங்களது எழுத்து திறமையை வெளிப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.

Read More : குட் நியூஸ்..!! ஞாயிற்றுக் கிழமையும் ரேஷன் கடைகள் செயல்படும்..!! அமைச்சர் பெரியகருப்பண் அறிவிப்பு..!!

Tags :
Advertisement