முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரதமரின் இலவச வீடு திட்டத்தில் நீங்களும் பயன்பெற வேண்டுமா..? அப்படினா இதை பண்ணுங்க..!!

Want to get a house under Prime Minister's Free Housing Scheme? In this post, we will see what you need to do for that.
05:10 AM Aug 03, 2024 IST | Chella
Advertisement

பிரதமரின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டை பெற வேண்டுமா? அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Advertisement

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014இல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதையடுத்து, அடுத்த ஆண்டே பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பலன் பெறுவார்கள். இதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் இருந்தால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு வாங்க முடியாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் சொந்த வீடு கட்டலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வீடற்ற குடும்பமாக இருத்தல் வேண்டும் அல்லது இரண்டு அறைகள், கச்சா சுவர்கள், கச்சா கூரை கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவற்ற குடும்பத்தினராக இருத்தல் வேண்டும். 16 முதல் 59 வயது வரையிலான வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பமாக இருத்தல் வேண்டும். உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

நிலமற்ற குடும்பங்கள், சாதாரண வேலை மூலம் வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினராக இருக்க வேண்டும். அது போல் விண்ணப்பதாரர் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரருக்கு நிரந்தர வீடு இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டில் இருக்க வேண்டும்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை அல்லது ஆதார் எண், புகைப்படம், பயனாளியின் வேலை அட்டை அல்லது வேலை அட்டை எண், வங்கி பாஸ் புத்தகம், ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண், கைபேசி எண் ஆகியவை வேண்டும். வீட்டிலேயே பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமினுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாவிட்டால், மேலே உள்ள அனைத்து ஆவணங்களுடன் பொது சேவை மையத்திற்கு செல்லலாம். வீட்டு வசதித் திட்ட உதவியாளரிடம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் https://pmaymis.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். அதில் மெனு பாரில் மூன்று பைல்களைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யுங்கள். பின்னர் சில விருப்பங்களை பட்டியல் வடிவில் உங்கள் முன் தோன்றும். அவற்றில் நீங்கள் awaassoft என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் மற்றொரு பட்டியல் திறக்கும். அதில் நீங்கள் டேட்டா என்ட்ரி என்பதை கிளிக் செய்ய வேண்டும். Data Entry for Awaas என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து விட்டு continue என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் பயனாளியின் பெயர், கடவுச் சொல், கேப்ட்சா ஆகியற்றை என்டர் செய்து பட்டனை கிளிக் செய்யவும். அதில் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர் பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை நிரப்ப வேண்டும்.

வேலை அட்டை எண், ஸ்வச் பாரத் மிஷன் பதிவு போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்தை ஆன்லைன் மட்டுமின்றி, பொது சேவை மையம் மூலமும் நிரப்பலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால கெடு இந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறம், கிராமப்புறம் ஆகியவற்றில் வீடுகளை பெறலாம்.

Read More : ”எதிர்காலத்தில் காத்திருக்கும் ஆபத்து”..!! ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
PM HOmeஇலவச வீடுபிரதமரின் ஆவாஸ் யோஜனாபிரதமர் மோடி
Advertisement
Next Article