For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் வீடு இயற்கையாகவே குளிர்ச்சியாக மாற இதை பண்ணுங்க..!! இனி ஏசியே தேவையில்லன்னு சொல்லுவீங்க..!!

02:41 PM Apr 15, 2024 IST | Chella
உங்கள் வீடு இயற்கையாகவே குளிர்ச்சியாக மாற இதை பண்ணுங்க     இனி ஏசியே தேவையில்லன்னு சொல்லுவீங்க
Advertisement

வெயில் காலம் துடங்கிவிட்டாலே ஏசியின் விற்பனை களை கட்டத் தொடங்கிவிடும். என்னதான் ஏசி இருந்தாலும் நாள் முழுவதும் வீட்டில் ஏசி போட்டு வைக்க முடியாது. அதுவும் மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு அது சாத்தியமே இல்லை. இந்நிலையில் தான், வீட்டை எப்படியெல்லாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஐஸ் கட்டி மற்றும் டேபிள் ஃபேன் : கடுமையான வெயில் தாக்கம் இருந்தால், ஒரு பவுள் நிறைய ஐஸ் கட்டிகளை நிரப்பி அதை டேபிள் ஃபேன் முன் வைத்தால் ஏசி போல் சில்லென காற்று வீசும்.

எக்ஸாஸ்ட் ஃபேன் : வீட்டில் இருக்கும் வெப்பம் நிறைந்த காற்றை வெளியேற்ற உதவ எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துவதால், வீடு கூலாக இருக்கும்.

கதவுகளைத் திறந்து வையுங்கள் : வெளிக்காற்று உள்ளே வருமாறு கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்த வைக்க வேண்டும். அதேசமயம் வீட்டில் இருக்கும் வெப்பமும் வெளியேறும். மாலை நேரத்திலும் கதவைத் திறந்து வைத்தால், குளிர்சியான காற்று வீட்டையும் குளிர்ச்சியாக்கும்.

தேவையற்ற மின் சாதனங்ள் : வீட்டில் பல்பு தேவையில்லாமல் எரிந்தாலோ, கணினி, ஃபிரிஜ் என மின் சாதனப் பொருட்கள் தேவையில்லாமல் ஓடிக் கொண்டிருந்தால் அதை அனைத்து விடுங்கள். அவை வெப்பத்தை வெளியேற்றக் கூடியவை.

நீர் அருந்துங்கள் : அடிக்கடி நீர் அருந்துவதால் உங்கள் உடல் வெப்பம் தனிந்து ஈரப்பதம் தக்க வைக்கப்படும். இதனால், வெப்பத்தில் எரிச்சல் உங்களைத் தாக்காது.

நீர் நிறைந்த பழங்கள் : தர்பூசணி, கிர்ணி பழம், முலாம் பழம், வெள்ளறி என நீர் நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள்.

செடி வளர்ப்பு : வீட்டிற்குள் இடம் இருந்தால் ஆங்காங்கே செடிகள் வைத்தால் வீடு குளிர்ச்சியை தக்க வைக்கும். அதேபோல் வீட்டில் ஆங்காங்கே பவுல்களில் தண்ணீர் நிரப்பி கூழாங்கற்களைப் போட்டு வைத்தாலும் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

தேவையற்ற அடைப்பை நீக்குங்கள் : வீட்டில் தேவையற்ற மர சாமான்கள், கட்டு கட்டாக நியூஸ் பேப்பர்கள் என குவித்து வைத்திருந்தால் அவற்றை உடனே நீக்கி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். காற்று உள்ளே செல்ல இடத்தை விசாலமாக்குங்கள்.

காட்டன் துணி : ஸ்கிரீன் துணி, சோஃபா கவர், கட்டில் மெத்தை, தலையணை என எதுவாயினும் அவற்றிற்கு காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். அவை வீட்டின் குளிர்ச்சியை தக்க வைக்கும்.

மொட்டை மாடியில் நீர் தெளியுங்கள் அல்லது தென்னை ஓலை : உங்கள் சீலிங் குளிர்ச்சியாக இருந்தால்தான் வீட்டின் வெப்பம் இறங்காது. அதற்கு அவ்வபோது மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்தால் சீலிங் குளிர்ச்சியாக இருக்கும். பச்சையான தென்னை ஓலைகளை மாடியில் பரப்புவதன் மூலம் நேரடியாக வெயில் வெப்பம் தாக்குவதைத் தவிர்க்கலாம்.

Read More : பெண்களுக்கு எந்த வயதில் செக்ஸ் மீதான ஆசை அதிகரிக்கும்..? ஆய்வு முடிவில் வெளியான ஆச்சர்ய தகவல்..!!

Advertisement