For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் துணை உங்களை விட்டு பிரியாமல் இருக்க இதை பண்ணுங்க..!! இது ரொம்ப முக்கியம்..!!

01:38 PM May 07, 2024 IST | Chella
உங்கள் துணை உங்களை விட்டு பிரியாமல் இருக்க இதை பண்ணுங்க     இது ரொம்ப முக்கியம்
Advertisement

வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க ஆரோக்கியமான மற்றும் நீடித்த உறவு உறுதுணையாக இருக்கும். ஆனால், இது போன்றதொரு உறவை உருவாக்கிக் கொள்ள அதிக கவனமும், அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. நீண்ட காலம் நீடிக்கும் உறவை அடைவதற்கான வழிகளை இங்கே நாம் பார்க்கலாம்.

Advertisement

ஆரோக்கியமான எல்லைகள்: உறவில் இருக்கும் இருவரும் தங்களுக்கென சில தனிப்பட்ட எல்லைகள் மற்றும் வரம்புகளை வைத்திருப்பது அந்த உறவை பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. உறவுகளில் ஆரோக்கியமான எல்லைகளை பேணுவது குறிப்பிட்ட உறவுகளை வலுப்படுத்த மற்றும் சுயமரியாதை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவும்.

உறுதுணை: உறவில் இருக்கும் இருவர், அவரவர் இலக்குகள் மற்றும் கனவுகளை அடைய ஆதரித்து கொள்வதும், உதவி செய்வதும், ஊக்குவிப்பதும் உறவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதுபோன்றதொரு சூழல் உறவில் உள்ள இரு நபர்கள் தங்கள் உறவு புரிதல் நிறைந்த உறவாகவும், மகிழ்ச்சியானதாகவும் உணர்கின்றனர்.

ஆர்வங்களை பகிர்ந்து கொள்ளுதல்: ஒரு உறவில் இருக்கும் இருவரும் இணைந்து உண்மையிலேயே ரசித்து ஈடுபாட்டுடன் செய்யும் விஷயங்கள் அல்லது செயல்பாடுகளை பகிர்ந்து கொள்வது, அதனை சேர்ந்தே செய்வது என்பது உறவில் வலுவான இணைப்பையும், பிணைப்பையும் உருவாக்குகிறது. இதன் மூலம் ஒருவருக்கொருவர் சிறந்த துணையாக இருக்க முடிகிறது. மேலும், உறவில் அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குகிறது.

உறவில் உள்ள இரு நபர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை மதிப்புகளை மற்றும் நம்பிக்கைகளை கொண்டிருப்பது அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. உறவில் இணக்கமாக இருப்பது மற்றும் அனுசரித்து செல்வது என்பது திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காத போது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையை எளிதாக ஏற்று கொள்ள உதவுகிறது. கடினமான உரையாடல் (difficult conversation) என்பது சங்கடமான தலைப்பு அல்லது எதிர்மறையான அனுபவத்தைப் பற்றிய திட்டமிடப்பட்ட விவாதமாகும். இது உறவுகளில் இருக்க வேண்டும். மாறாக இந்த வகை உரையாடல்களை தவிர்ப்பது உறவில் தடைகளை ஏற்படுத்தும். சில விஷயங்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அல்லது சங்கடமாக இருந்தாலும் அது குறித்து விவாதிப்பது மற்றும் பேசுவது உறவை சிறப்பாக கொண்டு செல்ல அவசியம்.

உறவில் இருக்கும் இருவரும் வாழ்க்கை துணையாக இருக்கும் முன் நண்பர்களாக இருக்க வேண்டும். பார்ட்னர் என்பதை விட ஃபிரெண்ட்ஷிப் என்னும் நிலையில், இருவர் தங்களது உறவை சிறப்பாக வார்த்தெடுத்து கொள்ள முடியும். அதே நேரம் நண்பர்களாக இருப்பதால் ஒருவர் மற்றொருவரின் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை எளிதாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப அனுசரித்து நடக்க பயனுள்ளதாக இருக்கும்.

முன்னுரிமை: எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உறவு நீடிக்க உங்கள் பார்ட்னருக்கு போதுமான முன்னுரிமை அளிப்பது அவசியம். அவர்களுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். நீங்கள் வேலையில் இருக்கும்போது கூட அவர் மெசேஜ் அனுப்பினால் அல்லது கால் செய்தால் உரிய முறையில் பதில் அளிப்பது, அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குவது போன்ற எளிய விஷயங்கள் உங்கள் உறவை சிறப்புடையதாக வைக்கும்.

Read More : அதிர்ச்சி..!! கேரளாவில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

Advertisement