பூமியைத் தவிர மற்ற கிரகங்களில் சூரிய கிரகணம் ஏற்படுமா?
Solar eclipses: பூமியில் மட்டும் தான் சூரிய கிரகணம் ஏற்படுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது. எந்தெந்த கிரகங்களில் சூரிய கிரகணம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேற்று (ஏப்ரல் 8) நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் வேறு சில நாடுகளில் தெரிந்தது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் தொடர்பான மேலும் சில உண்மைகள் குறித்து இந்தபதிவில் தெரிந்து கொள்வோம்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. மேலும் சூரியன் சந்திரனால் முழுமையாக மூடப்பட்டால், அது முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பூமியில் மட்டும் தான் சூரிய கிரகணம் ஏற்படுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது. அதாவது, பூமியைத் தவிர, செவ்வாய் கிரகத்திலும் சூரிய கிரகணத்தின் நிகழ்வு காணப்பட்டது. 2013-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இது தவிர, வியாழன் கிரகத்திலும் சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில், வியாழன் கிரகத்தில் ஒரே நேரத்தில் மூன்று சூரிய கிரகணங்கள் ஏற்பட்டன. 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி கிரகத்தில் சூரிய கிரகணம் ஏற்படும். கடைசியாக 2006 ஆம் ஆண்டு சனி கிரகத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Readmore: மரணம்!… அம்மை என்று அலட்சியம் வேண்டாம்!… பெற்றோர்களே கவனம்!