முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே அலர்ட்...! இந்த 67 மருந்தை பயன்படுத்த வேண்டாம்...! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..‌!

07:01 AM Apr 24, 2024 IST | Vignesh
Advertisement

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 67 மருந்துகள் தரம் இல்லாதவை என தெரியவந்துள்ளது. அவற்றில் ஒரு மருந்து தவறான வர்த்தக பெயருடன் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், உத்தரகண்ட் போன்ற வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், வலி, காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரம் இல்லாதவை என கண்டறியப்பட்டது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற மருந்துகளை விற்பனை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அதுபோன்ற மருந்துகளை விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Next Article