இரவு நேரங்களில் இந்த உணவுகளை தொடவே தொடதீங்க..!! அப்புறம் பிரச்சனை உங்களுக்குத்தான்..!!
எல்லா வகையான உணவுகளையும் நம் குடல் ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்வது கிடையாது. ஒரு சில உணவுகள் நமக்கு மிகவும் ஃபேவரட் ஆக இருப்பதைப் போலவே குடலுக்கும் ஒரு சில உணவுகள் பிடித்தவையாக இருக்கும். அப்படி பார்க்கும் பொழுது செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு சில உணவுகளையும், இரவு நேரத்தில் அவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் சிக்கல்களையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
எந்தெந்த உணவுகளை ஜீரணம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்..?
கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக செரிமானம் செய்யப்படும். அதாவது பழங்கள், அரிசி, பாஸ்தா போன்றவை தோராயமாக 20 நிமிடங்களில் செரிமானமாக ஆரம்பித்து, 2 முதல் 3 மணி நேரங்களில் முற்றிலுமாக செரிமானம் ஆகிவிடும். மறுபுறம் முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகளை செரிமானம் செய்ய 4 முதல் 6 மணி நேரம் ஆகும். இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக இவ்வளவு தாமதமாக செரிமானம் செய்யப்படுகிறது.
புரோட்டீன்கள்
புரோட்டீன்கள் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மீன் அல்லது சிக்கன் போன்ற மெலிந்த புரதங்களை செரிமானம் செய்ய 3 முதல் 4 மணி நேரங்கள் ஆகும். இதுவே, சிவப்பு இறைச்சி, பீன்ஸ் வகைகள் போன்றவை 6 முதல் 8 மணி நேரம் நேரத்தில் செரிமானம் செய்யப்படும்.
கொழுப்புகள்
இருப்பதிலேயே செரிமானம் ஆவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வது கொழுப்புகள் தான். கொழுப்புகள் அதிகம் நிறைந்த சீஸ், நட்ஸ் மற்றும் பொறிக்கப்பட்ட உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும். ஏனென்றால், கொழுப்புகள் என்பது சிக்கலான மூலக்கூறுகள். இவற்றை உடைப்பதற்கு கல்லீரலில் இருந்து பைல் சாறு தேவைப்படுகிறது. கொழுப்பு வயிறு மற்றும் குடலுக்குள் நுழைவதற்கே 6 முதல் 8 மணி நேரம் ஆகும்.
பர்கர் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இவை நம்முடைய செரிமான பாதையில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் இருக்குமாம் அல்லது அதில் உள்ள கொழுப்பு அளவைப் பொறுத்து இன்னும் கூடுதல் நேரம் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. செரிமானத்திற்கான சராசரி நேரம் என்பது 28 மணி நேரம். ஜூஸ் வகைகள், சூப் போன்றவை விரைவாக செரிமானம் ஆகிவிடும்.
அதே நேரத்தில் நார்ச்சத்து புரோட்டீன் அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே உங்களுடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுங்கள். இவை உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்துக்கொள்ளும்.
Read More : இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் வெங்காயம்..!! அடடே இந்த பிரச்சனைக்கும் தீர்வு தருதா..?