For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த விவரங்களை யார் கேட்டாலும் கொடுக்காதீங்க..!! மீறினால் சிக்கல் உங்களுக்குத்தான்..!!

11:52 AM Nov 14, 2023 IST | 1newsnationuser6
இந்த விவரங்களை யார் கேட்டாலும் கொடுக்காதீங்க     மீறினால் சிக்கல் உங்களுக்குத்தான்
Advertisement

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை தற்போது முக்கிய ஆவணமாக உள்ளது. இது தனிப்பட்ட மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக அடையாளம் காணும் வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில், ஆதார் கார்டில் வழங்கப்பட்ட தரவை நாம் புதுப்பிக்க வேண்டும். இந்தத் தகவலை மாற்றுவதற்கு எல்லை உண்டு. நீங்கள் எவ்வளவு மற்றும் எத்தனை முறை தகவலை மாற்றலாம் என்ற சந்தேகத்திற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.

Advertisement

உங்கள் ஆதார் அட்டையில், உங்கள் பாலினம் மற்றும் பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். உங்கள் ஆதாரில் குடியிருப்பு முகவரியை மாற்றலாம். அதற்கு அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது முகவரிக்கான பிற சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். 3-வது முறையாக ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மாற்ற திட்டமிட்டால், அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.

ஆதார் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை ஒருபோதும் தெரியாத நபருக்கு வழங்கக்கூடாது. ஆதார் பல்வேறு வகையான மோசடிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மோசடிகளைத் தடுக்க உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் யாருக்கும் தரக்கூடாது. இது தவிர, உங்கள் செல்போனில் நீங்கள் பெற்ற ஆதார் ஓடிபியை அடையாளம் தெரியாத நபரிடம் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement