இந்தியர்கள் விலங்குகளாக தெரிகிறார்களா?. பில்கேட்ஸின் கருத்துக்கு கடும் கண்டனம்!.
Bill Gates: புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடமாக இந்தியா விளங்குகிறது என்று கூறிய பில்கேட்ஸின் கருத்து சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில்கேட்ஸ், 69, சமீபத்தில், 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பில்கேட்ஸ் கூறியதாவது: இந்தியாவில் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன. அங்கு அனைத்தும் நிலையாக உள்ளதால், போதுமான வருவாய் கிடைக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளில் அந்நாட்டில் உள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பர்.
புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடமாக இந்தியா விளங்குகிறது. அங்கு நிரூபணமான பின், ஒரு விஷயத்தை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார். பில்கேட்சின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'இந்தியர்களான நாம், பில்கேட்சுக்கு விலங்குகள் போல தெரிகிறோம். அதனால் ஒரு புதிய விஷயத்தை நம் மீது பரிசோதிக்க அவர் விரும்புகிறார். 'முறையான உரிமம் இல்லாமல், அவரது அலுவலகம் நம் நாட்டில் இயங்குகிறது. நம் கல்வி முறை அவரை ஹீரோவாக்கி விட்டது. எப்போது விழிப்போம் என தெரியவில்லை' என, பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.