குழந்தைகள் வறட்டு இருமலால் கஷ்டப்படுகிறார்களா.? இந்த எளிய பாட்டி வைத்திய முறையை ஃபாலோ பண்ணி பாருங்க.!
தற்போது நிலவி வரும் மழைக்காலம் மற்றும் குளிர் காரணமாக குழந்தைகளுக்கு வறட்டு இருமல் சளி மற்றும் ஜலதோஷம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். இவற்றுக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய கை வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.
முதலில் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் இட்டு அது சூடானதும் ஆறு துளசி இலைகளை போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுக்க வேண்டும். இதனை குழந்தைகளின் முதுகு நெஞ்சு மற்றும் கால் பாதங்களில் தடவி வர வரட்டு இருமல் நெஞ்சு சளி ஆகியவை விரைவில் குணமடையும். இளம் சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து குழந்தைகள் உறங்க செல்வதற்கு முன் குடிக்க கொடுத்தால் நெஞ்சு சளி வரட்டு இருமல் மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றில் இருந்து குணம் பெறுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
உலர் திராட்சை பழங்களை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து லேசாக சூடாக்கி குழந்தைகளுக்கு கொடுத்து வர வரட்டு இருமலில் இருந்து தீர்வு கிடைக்கும். அதிமதுரம் கடுக்காய் மற்றும் மிளகு ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து இதனைத் தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நெஞ்சு சளி வரட்டு இருமல் ஆகியவை குணமடையும்.
தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் கலந்து குழந்தைகளுக்கு தலையில் தேய்ப்பதும் வரட்டு இருமலை போக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும். எனினும் இது ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சரியாக இருக்கும். ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கற்பூரம் தோல் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும் இதுபோன்ற எளிய பாட்டி வைத்தியங்களை கடைப்பிடிப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணலாம்.