நம்பர் 1 கோடீஸ்வரர்.. ஆனா தினமும் வீட்டில் இந்த சாப்பாடு தான்..!! - அம்பானி வீட்டு உணவு முறை ஒரு பார்வை..
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர் யாரென்று கேட்டால் குழந்தைகள் கூட அது முகேஷ் அம்பானிதான் என்று சரியாக கூறுவார்கள். சமீபத்தில் நடந்த அவரது இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ராதிகா மெர்ச்சண்ட் உடன் இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வண்ணம் ஆடம்பரமாக செய்தார்கள். இந்த திருமணத்திற்காக கிட்டதட்ட 5000 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மிகப்பெரிய தொகை அவர்களின் சொத்தில் வெறும் 0.5% மட்டுமே.
முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் அளவற்ற செல்வம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையைக் கொண்டிருந்தபோதிலும், அவர்கள் மிகவும் எளிமையான உணவுமுறையைதான் பின்பற்றுகிறார்கள். அவர்கள் எப்போதும் பிரத்தியேக உணவகங்களில் மிகவும் ப்ரைவசியாக சாப்பிடுவார்கள் என்று பலர் கருதினாலும், அவர்கள் சாதாரண மக்களைப் போலவே அடிப்படையான மற்றும் பாரம்பரிய உணவு முறையையே பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள்.
அம்பானி குடும்பத்தினர் சைவ உணவு உண்பவர்கள், முகேஷ் அம்பானி கடுமையான டயட்டைப் பின்பற்றுகிறார். முகேஷ் அம்பானி, பருப்பு, ரொட்டி மற்றும் சாதம் போன்ற எளிய உணவுகளையே விரும்பி உண்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் பிரபல தென்னிந்திய உணவான இட்லி-சாம்பாரை விரும்பி சாப்பிடுவதாக அவர் முன்னர் பகிர்ந்து கொண்டார். அம்பானி குடும்பம் வழக்கமாக விரும்பி சாப்பிடும் சில உணவுகளைப் பார்ப்போம்.
காலை உணவு : அம்பானி குடும்பத்தின் காலை உணவு மிகவும் சிம்பிளானது. பழங்கள், பழச்சாறு, இட்லி மற்றும் சாம்பார் ஆகியவற்றில் ஒன்றையே எடுத்துக்கொள்கிறார். ஒரு நேர்காணலின் போது, நிதா அம்பானி,முகேஷ் அம்பானி உணவு முறையைக் கடைபிடிப்பதில் மிகவும் ஒழுக்கமானவர் என்றும், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியே சென்று உணவருந்துவோம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கு முழுக்க முழுக்க வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே விரும்பிச் சாப்பிடுவார் எனக்குறிப்பிட்டிருந்தார்.
மதியம் மற்றும் இரவு உணவு ; மதியம் மற்றும் இரவு உணவிலும் சிம்பிளான இந்திய உணவு வகைகளையே விரும்பி எடுத்துக்கொள்கிறார். பருப்பு, சப்ஜி, அரிசி, சூப்கள் மற்றும் சாலட்களை உள்ளடக்கிய குஜராத்தி வகை உணவுகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பல பார்ட்டிகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் கூட, முகேஷ் அம்பானி சைவ உணவில் உறுதியாக இருக்கிறார் மற்றும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைத் தவிர்ப்பார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது
மாலை நேரம் : மாலையில், ஸ்னாக்ஸ் ஆக பேல் பூரியை விரும்பி சாப்பிடுகிறார். இந்த மொறுமொறுப்பான மற்றும் கசப்பான உணவு அம்பானி வீட்டில் மிகவும் பிடித்தமானது. அபரிமிதமான செல்வம் இருந்தபோதிலும், அம்பானிகள் எளிமையான, பாரம்பரிய உணவுகளை, ஆரோக்கியம் மற்றும் சுவையை மையமாகக் கொண்டு, கோடீஸ்வரர்கள் கூட சௌகரியமான உணவில் ஈடுபட முடியும் என்பதை நிரூபிக்கிறார்கள்.
Read more ; இணையத்தில் வைரலான உல்லாச வீடியோ; கணவனை ஏமாற்றிய பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..