திமுகவின் முழு கவனமும் விஜய் மீது தான்..!! 2026இல் அதிமுகவுடன் விசிக கூட்டணி..!! பரபரப்பை கிளப்பும் சவுக்கு சங்கர்..!!
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, அதே சம்பவத்திற்காக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கிடையே, பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவருமே சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மீண்டும் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார். தற்போதைய உளவுத்துறை அதிமுகவை விட விஜய்யை தான் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். விசிக-வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவை அழைத்திருக்கக் கூடாது. திருமாவளவனை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதிமுகவுடன் விசிக கூட்டணி வைத்தால் நிச்சயம் 15 சீட் உறுதியாக ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
திருமாவளவன் 2026இல் திமுக கூட்டணியை விட்டு வெளியே வருவார் என்று நம்புகிறேன். விசிகவின் கட்சியை நடத்துவது திருமாவளவன் அல்ல உளவுத்துறை தான். திருமாவுக்கு அரசியலே தெரியவில்லை. ரொம்ப வருத்தமா இருக்கு. மேலும், இந்த அதிகாரிகள் போன்ற பச்சோந்தியை எங்கும் பார்க்க முடியாது என கடுமையாக விமர்சித்தார்.
Read More : Flipkart நிறுவனத்தில் வேலை..!! இந்த கல்வித் தகுதி இருந்தாலே போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!