"கவ் மூத்ர (கோமிய) மாநிலங்கள் என்றே அழைப்போம்".! திமுக எம்பி-யின் சர்ச்சை பேச்சு.! முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்.!
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தர்மபுரி எம்பி செந்தில்குமார் பாராளுமன்றத்தில் பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை கடுமையாக கண்டித்து இருக்கிறார்.
வடமாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாரதி ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி வைத்திருக்கிறது. இந்த வெற்றி குறித்து பாராளுமன்றத்தில் பேசிய திமுக எம் பி செந்தில்குமார் "படிப்பறிவில்லாத இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் மட்டும்தான் பாரதி ஜனதா வெற்றி பெறும். அந்த மாநிலங்களை நாங்கள் கவ் முத்ரா( கோமியம்) மாநிலங்கள் என்று தான் அழைப்போம்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி "காங்கிரஸ் மற்றும் அதான் கூட்டணி கட்சிகள் வட இந்தியர்களையும் ஹிந்தி பேசும் மக்களையும் காட்டுமிராண்டிகள் படிப்பறிவில்லாதவர்கள் கொலைகாரர்கள் என விமர்சித்து வருகிறார்கள்" என்று வட மாநிலங்களில் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக எம்பி செந்தில்குமாரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஆர் எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட பேரவை தேர்தல்கள் குறித்து செந்தில்குமார் எம்பி பேசியதற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் செந்தில்குமாரை அழைத்து கண்டனம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். கழக உறுப்பினர்களுக்கு கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மன்னிப்பு அறிக்கை ஒன்றையும் எம்பி செந்தில்குமார் வெளியிட்டு இருக்கிறார்.