For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"திமுகவுக்கு பயம்... அரசியல் ஆட்டம் எப்படியும் மாறலாம்.!" கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்.!

03:59 PM Feb 03, 2024 IST | 1newsnationuser4
 திமுகவுக்கு பயம்    அரசியல் ஆட்டம் எப்படியும் மாறலாம்    கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்
Advertisement

2024ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்து தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக, தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் தனது முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த வாரம் துவங்கி விட்டது.

Advertisement

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக இணைந்து செயல்பட்டது. இந்நிலையில் அதிமுக, பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் அதிமுக தங்களது தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி தலைமையில், பெஞ்சமின், வேலுமணி,திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகிய ஐந்து பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இவர்கள் பல்வேறு தோழமை கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

பிப்ரவரி 9- ஆம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் பின்தங்கி இருப்பது பற்றி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் "கூட்டணிக் கட்சிகள் தங்களிடமிருந்து பிரிந்து அதிமுகவுடன் இணைந்து விடும் என்ற பயம் திமுகவிற்கு இருக்கிறது. அதனால்தான் தொகுதி பங்கீடு குறித்து விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் களத்தில் எதுவும் நடக்கலாம். எந்த நேரத்திலும் கூட்டணி மாறலாம் எனவும் தெரிவித்தார்.

அதிமுகவின் கூட்டணி அமைவதை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்திருக்கிறார் ஜெயக்குமார். மேலும் பாராளுமன்ற தேர்தலை நோக்கி அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளார். தேர்தல் பணிக்கான குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவிலேயே கூட்டணி பற்றிய முடிவுகளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் எனவும் தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Tags :
Advertisement