முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திமுக அரசு தென் மாவட்டங்களை ஒதுக்குகிறதா.? தொழிற்சாலைகள் அமைப்பதில் பாரபட்சம்.? முன்னாள் அதிமுக அமைச்சர் காட்டமான அறிக்கை.!

01:53 PM Nov 29, 2023 IST | 1newsnationuser4
Advertisement

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் உருவாகும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார. தமிழகத்தின் முன்னாள் அமைச்சரான ஆர் பி உதயகுமார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா பதவியில் இருந்த போது பல்வேறு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது இதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அம்மாவின் மறைவிற்குப் பிறகு முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். இதன் மூலமும் பல்வேறு தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன.

நான் தற்போதைய விடியல் அரசின் ஆட்சியில் இதுவரை தென் மாவட்டங்களுக்கு என்று எந்தவித முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. மதுரை விருதுநகர் தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களுக்கு தொழிற்சாலைகள் மற்றும் டைட்டில் பார்க் அமைக்க கடந்த ஆட்சியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இதற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் மதுரையில் அமைக்கப்பட இருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கியதாக தெரியவில்லை எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தென் மாவட்டங்களை புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். இங்கு எந்தவித தொழிற்சாலைகளும் அமைக்கப்படவில்லை மதுரையில் இட்லி தொழிற்சாலை மட்டும்தான் இயங்குகிறது எனவும் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பின் தங்கிய மாவட்டங்களை ஆளும் அரசு புறக்கணித்து வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
DmkgovernmentIndustrypoliticsSouthern district
Advertisement
Next Article