For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாகவே வைத்திருக்கும் திமுக”..!! அண்ணாமலை பாய்ச்சல்..!!

08:19 AM Apr 08, 2024 IST | Chella
”ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாகவே வைத்திருக்கும் திமுக”     அண்ணாமலை பாய்ச்சல்
Advertisement

திமுக அரசு ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓட, ஓட விரட்ட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வடுகபாளையம் புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசுகையில், ”அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என ஆண்கள் சிந்திக்கிறார்கள். சிலர் கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா ? என சிந்திக்கிறார்கள்.

எல்லோரும் வெவ்வேறு சிந்தனையோடு இருக்கிறார்கள். அனைவரின் எண்ண ஓட்டத்தையும் சரி செய்வோம். அணைகள் கட்டுவதற்கு இங்குள்ள அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை நாங்கள் செய்து காட்டுவோம். 100% பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது. குடிநீர் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசு திட்டம். பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓட, ஓட விரட்ட வேண்டும்.

நம் பணி பூர்த்தியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் மோடி வர வேண்டும். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில அரசால் நிலத்தை கொடுக்கவில்லை என்றால் ஊருக்குள் அப்பார்ட்மெண்ட் கட்டி கொடுக்கப்படும். நிலம் இல்லை என்றால் இதுதான் வழி. பிரச்சனைகளை முடித்து கொடுக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்து எம்.பி.யாக சென்றவர்கள் பாராளுமன்றத்தில் மவுனம் காத்து தற்போது திரும்பி வந்திருக்கின்றனர். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன்” என்று பேசினார்.

Read More : மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!! எப்போது தெரியுமா..?

Advertisement