For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீபாவளி ராக்கெட் போல் இனி பறக்கப் போகுது..!! தங்கத்தை இப்போவே வாங்கிருங்க..!! ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு தகவல்..!!

Gold prices have now touched new highs and 24 carat gold is approaching Rs 8000 per gram.
07:14 AM Oct 23, 2024 IST | Chella
தீபாவளி ராக்கெட் போல் இனி பறக்கப் போகுது     தங்கத்தை இப்போவே வாங்கிருங்க     ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு தகவல்
Advertisement

தங்கம் விலை இப்போது புதிய உச்சத்தைத் தொட்டு 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8000-ஐ நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாமா? அல்லது தங்கம் விலை குறையுமா? என்பது குறித்து பொருளாதார வல்லுநர் நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7300க்கு விற்கப்பட்டது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7964க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை இந்தளவுக்கு உயரும் நிலையில், இப்போதே தங்கத்தை வாங்கலாமா? அல்லது காத்திருக்கலாமா? என்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் வீடியோவில், "அமெரிக்காவில் தங்கம் விலை இப்போது ஒரு அவுன்ஸ் 2748 டாலர் வரை சென்றுவிட்டது. அதாவது, அமெரிக்காவில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதுவரை அந்தளவுக்கு உயரவில்லை. ஆனால், சில நாட்களில் இந்தியாவிலும் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும். ராக்கெட்டில் ஏறிய தங்கம் இப்போது சூப்பராக போய் கொண்டு இருக்கிறது.

அதேபோல 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.7965க்கு விற்கப்பட்டது. இது மிக விரைவில் ரூ.8000-ஐ தாண்டிவிடும். இத்துடன் நாம் ஜிஎஸ்டி வேறு கொடுத்துத் தங்கத்தை வாங்க வேண்டும். இந்தியாவில் இப்போது பண்டிகை சீசன் மற்றும் திருமண சீசன் வருகிறது. எனவே, இந்தளவுக்குத் தங்கம் விலை உயர்ந்தாலும் அதை மக்கள் வாங்கவே செய்வார்கள். தங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தேவை. இரண்டு ஆண்டுகளில் வீட்டில் எதாவது திருமணம் இருக்கிறது என்றால் உடனடியாக இப்போதே தங்கத்தை வாங்கி வைத்துவிடுங்கள்.

சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் இன்னும் தங்கத்தை வாங்குவதாகவும், அதுவே தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியாக இருந்தாலும் தங்கம் விலை உயரவே போகிறது" என்றார். அதேபோல அவர் தனது மற்றொரு முந்தைய வீடியோவில், "தங்கம் விலை தீபாவளி ராக்கெட் போல சர்னு பறக்குது. இந்த முறை தீபாவளிக்கு ராக்கெட் இல்லை தங்கம் தான்” என்று கூறியுள்ளார்.

Read More : பெண்களே நோட் பண்ணிக்கோங்க..!! மாதவிடாய் வலி உடனே பறந்துபோக இதை சாப்பிடுங்க..!!

Tags :
Advertisement