நெருங்கும் தீபாவளி..!! ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு..!! பொதுமக்கள் நிம்மதி..!!
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்திற்கு 8,500 டன் கோதுமை வழங்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் விற்பனை களைகட்டும் என்பதால் நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்க அனைத்து பொருட்களையும் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவன பொருள்களும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.