நெருங்கும் தீபாவளி பண்டிகை..!! அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமுதம் பல்பொருள் விற்பனை அங்காடி மூலம் ரூ.499-க்கு 15 மளிகைப் பொருட்கள் கிடைக்கும் என்று முன்னதாக அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது ஒரு அறிவிப்பையும் அமைச்சர் சக்கராபாணி வெளியிட்டுள்ளார். அதாவது, ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் விநியோகம் செய்யவில்லை என்று புகார் வந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும். இந்த பொருள்கள் வடகிழக்கு பருவமழையால் சேதம் அடையாதவாறு பாதுகாத்து வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள், தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : அடிக்கடி உங்களுக்கு இந்த பழக்கம் இருக்கா..? இதிலிருக்கும் ஆபத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்..!!