முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

26-ம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்...!

District level postal grievance redressal camp is going to be held on 26th.
06:50 AM Jun 18, 2024 IST | Vignesh
Advertisement

கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 26-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு, அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர மத்திய கோட்டம், சென்னை 600 017 என்ற முகவரியில் நேர்முகமாக நடைபெறும். அஞ்சல் துறை சார்ந்த சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு பிரிவின் தலைவர் நேரடியாக விசாரிப்பார். வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர், சென்னை நகர மத்திய கோட்டத்திற்கு அனுப்ப வேண்டும்.

தபால்/ மணியார்டர் சம்பந்தமான புகாரில் அனுப்பப்பட்ட தேதி, அனுப்புனர் மற்றும் பெறுநர் பெயர், முகவரி, கண்காணிப்பு எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ளூரில் உள்ள தபால் நிலையங்களில் புகார் கொடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட பதில் திருப்தியடையாதவர்கள் மட்டுமே தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சாதாரண அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பலாம். புகார்களை கீழ்கண்ட தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அனுப்பலாம்.

Tags :
ChennaiGrievance CamppensionPOST OFFICE
Advertisement
Next Article