இன்று முதல் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு ORS பவுடர் விநியோகம்...!
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்பட உள்ளது.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது; உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலமாக கண்டறிந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அதை தடுக்கும் வகையில் உணவில் உப்பின் அளவை குறைத்து நோய்களிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து பயிலரங்கம் நடைபெறுகிறது.
உணவில் உப்பு தேவையான அளவைவிட அதிகமாக பயன்படுத்துவதால் தான் பிரச்னைகள் ஏற்படுகிறது. அனைத்து வயதினரும் குறிப்பாக இளம்வயதில் இருந்தே உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும். ரத்தக்குழாய் பாதிப்புகள், எலும்பு தேய்மானம் , சிறுநீரக பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் குடிநீர் அருந்தி உயிரிழந்ததன் எதிரொலியாக இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.