முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெறுப்பூட்டும் பேச்சு..! மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்கு பதிவு..!

01:50 PM Mar 20, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, "ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

Advertisement

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கருத்துக்கு கண்டனங்கள் எழுந்ததையடுத்து இன்று அவர் மன்னிப்பு கேட்டார். இது குறித்து அவரது பதிவில், "என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு, எனது வார்த்தைகளை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்துக்கள் சிலருக்கு வலியை ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இதனால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும், என் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எனது முந்தைய கருத்துக்களைத் திரும்பப் பெறுகிறேன்” எனக் குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில் வெறுப்பூட்டும் பேச்சால் பகையை வளர்த்து, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவின் அடிப்படையில் காவல்துறை சார்பில் ஐபிசி 123, 153A, 5051B, 5052 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
shobha karandlaje bjp
Advertisement
Next Article