இந்த வைட்டமின் குறைபாட்டிற்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறீர்களா.! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி.!?
பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லை என்றால் அவை உடலில் பல்வேறு நோய்த்தாக்குதல்களை ஏற்படுத்தும். இதுபோல வைட்டமின் சத்துக்கள் உடலில் குறையும் போது நோய் பாதிப்புகள் உடலில் உருவாகும் என்பதால் பலரும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமலே வைட்டமின் சத்துக்களை கொண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். உணவின் மூலமே இந்த குறைபாட்டை சரி செய்ய இயலும் என்றாலும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதையே விரும்புகின்றனர்.
குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடலில் முடி உதிர்தல், சோர்வு, எலும்புகள் பலவீனம், தசை வலி, பல் வலி, ஈறுகளில் இரத்தம் வடிதல், மனச்சோர்வு, முகம் மற்றும் சருமம் வறட்சி, உடலில் அரிப்பு போன்ற அறிகுறிகள் உடலில் ஏற்படும். இதற்கு மருத்துவரை சந்திக்காமலே ஒரு சிலர் மாத்திரைகளை தானாக எடுத்து வருவது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பொதுவாக வைட்டமின் டி ஊட்டசத்து என்பது சூரிய ஒளியிலிருந்து நம் உடலுக்கு கிடைக்கும் என்று பள்ளியிலே படித்திருப்போம். காலை,மாலை என இருவேளைகளிலும் மிதமான சூரிய ஒளி இருக்கும்போது நம் உடல் படும் படி வெயிலில் நடந்து வந்தால் வைட்டமின் டி சத்து போதுமான அளவு நமக்கு கிடைக்கிறது. இதைத் தவிர, முட்டை, மீன், உலர் பழங்கள், பால் போன்ற உணவுகளில் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது.
மருத்துவரின் அறிவுரை இல்லாமலே வைட்டமின் டி சத்துக்கான சப்லிமெண்ட்களை எடுக்கும்போது, வைட்டமின் டி சத்தின் அளவு உடலில் அதிகமடைந்து வாந்தி, வயிற்று வலி, எடை குறைப்பு, முடி உதிர்தல், போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மேலும் அளவுக்கு அதிகமான வைட்டமின் டி உடலில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை குறைய செய்கிறது. இதனால் உடலில் எந்த நோய்களும் எளிதாக தாக்கி உடலை பலவீனப்படுத்தும்.