நீண்ட நேரம் மொபைல் பாக்குறீங்களா.? உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி.!
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல நவீன பொருட்கள் வந்துவிட்டன. குறிப்பாக தற்போது தொலைபேசி இல்லாத நபர்களே இல்லை என்று தான் சொல்லலாம். அந்த அளவிற்கு தொலைபேசி நம் வாழ்வில் அங்கமாக மாறிவிட்டது. தற்போதுள்ள இளைஞர்கள் தொலைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தி வருவதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக கழுத்து வலி தற்போது உள்ள இளைஞர்களுக்கு அதிகமாக ஏற்பட்டு வருகிறது.
மத்திய வயதுள்ள இளைஞர்களை தாக்கும் இந்த கழுத்து வலியின் காரணமாக கூறப்படுவது தொலைபேசி தான் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றன. "செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டீஸ்" என்று கூறப்படும் இந்த கழுத்து வலி கால் நூற்றாண்டுக்கு முன்னதாக வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் தற்போது உள்ள காலகட்டத்தில் இளம் வயதினரை அதிகம் பாதிக்கிறது.
அதிக நேரம் தொலைபேசி, டிவி அல்லது கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை பார்த்து வருவதால் கழுத்தின் அசைவு நிறுத்தப்பட்டு கழுத்து எலும்பின் ஜவ்வு தேய்ந்து விடுகிறது. பொதுவாக 40 வயதினருக்கு மேல் தான் இந்த ஜவ்வு தேய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இளம் வயதிலேயே இவ்வாறு ஜவ்வு தேய ஆரம்பிப்பதற்கு நீண்ட நேரம் தொலைபேசியை பார்ப்பது தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு ஏற்படும் கழுத்து வலியை ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் சாதாரண மருந்து, மாத்திரைகளின் மூலம் சரி செய்ய இயலும். பிசியோதெரபி மற்றும் கழுத்திற்கு பட்டை போன்றவற்றின் மூலமும் இதை சரி செய்யலாம். இதை கண்டு கொள்ளாமல் விட்டால் அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.