அதிர்ச்சி.! உடலில் புரதச்சத்து அதிகமானால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா.!?
பொதுவாக புரதச்சத்து என்பது நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாக இருந்து வருகிறது. மனித உடலுக்கு தேவையான மூன்று முக்கியமான ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்றாகும். உடலில் உள்ள உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு ஆக்சிஜன் மிகவும் முக்கியமான ஒன்று. இதை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு புரதச்சத்து மிகவும் அவசியம்.
போதுமான புரதச்சத்து உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடலின் வளர்ச்சியில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். மேலும் மூளை வளர்ச்சி குறையும். இவ்வாறு உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் புரதச்சத்து உடலில் அதிகமானால் பல வகையான நோய்களும் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். புரத சத்து அதிகமாவதால் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்?
1. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழிக்கேற்ப புரதச்சத்து உடலில் அதிகம் அடைந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். காலப்போக்கில் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பும் உண்டு.
2. ஒரு சிலர் உடல் எடையை குறைப்பதற்காக ப்ரோட்டின் டயட் முறையை பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு செய்யும் போது உடலில் புரதச்சத்து அதிகமடைந்து இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.
3. அளவுக்கு அதிகமான புரதம் உடலில் சேர்ந்தால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுகின்றது.
4. மன அழுத்தம், மனப்பதட்டம், மனச்சோர்வு போன்ற மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஹார்மோன்களை புரதசத்து அதிகரிக்கிறது.
5. அளவுக்கதிகமான புரதச்சத்து உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தி சோர்வை உருவாக்குகிறது.
6. உடல் எடையை குறைப்பதற்கு புரதம் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்தாலும், அதிகப்படியாக புரதம் எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை அளவுக்கு அதிகமாக கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.