வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுமா.! மருத்துவர்களின் அறிவுரை என்ன.?
பொதுவாக வெள்ளரிக்காயில் நம் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நீர் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் பல நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும் என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்?
வெயில் காலங்களில் அதிகமாக கிடைக்கும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடலை எப்போதும் வறட்சியடைய செய்யாமல் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதை தடுக்கிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. உயர்ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். சரும பிரச்சனை மற்றும் தோல் நோய்களை சரி செய்து சருமத்தை பொலிவடைய செய்கிறது.
ஆனால் வெள்ளரிக்காய் ஒரு சில நேரங்களில் சாப்பிடக்கூடாது. அதாவது வெள்ளரிக்காயில் குக்குர்பிடாசின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் இதை அதிகமாக சாப்பிடும் போது செரிமான பிரச்சனை ஏற்பட்டு நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலம் அதிகமாகவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் வெள்ளரிக்காய் இரவு நேரத்தில் சாப்பிடும் போது உடலில் நீர் அதிகமடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதனால் தூக்கமின்மை பிரச்சனையும் உருவாகும். எனவே வெள்ளரிக்காய் பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாகவும், இரவு நேரத்திலும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.