For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CSK-க்கு பேரிடி!… நாளைய போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!… நாடு திரும்புவதால் சிக்கல்!

07:36 AM May 17, 2024 IST | Kokila
csk க்கு பேரிடி … நாளைய போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல் … நாடு திரும்புவதால் சிக்கல்
Advertisement

CSK VS RCB: நாளை நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் இருந்து சிஎஸ்கே வீரர் மொயின் அலி விலகவுள்ளார்.

Advertisement

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நாளை (மே 18) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், ஒருபுறம் இவ்விரு அணிகளுக்கான போட்டியின்போது, இரவு 8 மணி முதல் 11 மணி வரை 80 சதவிகிதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தற்போதே கவலையடையத் தொடங்கி உள்ளனர்.

மறுபுறம் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உள்ள மொயின் அலி நாளைய போட்டியில் இருந்து விலகவுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரருக்காக மொயின் அலி நாடு திரும்பவுள்ளார். இருப்பினும், ஒருவேளை நாளைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்குள் சென்றுவிட்டால் மொயின் அலி இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே பதிரனா, தீபக் சஹர், முஸ்தஃபிசூர் ரகுமான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: ஆண்களே!… டூ விலர் பயணத்தால் ஏற்படும் ஆபத்து!… ரத்த ஓட்டத்தை குறைத்து ஆண்மையை பாதிக்கும்!

Advertisement