For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடி...! கடந்த ஆண்டை விட 17.30 சதவீதம் அதிகமாகும்...!

05:30 AM Feb 13, 2024 IST | 1newsnationuser2
நேரடி வரி வசூல்  ரூ 18 38 லட்சம் கோடி     கடந்த ஆண்டை விட 17 30  சதவீதம் அதிகமாகும்
Advertisement

2024 பிப்ரவரி 10, வரையிலான நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 17.30 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. 2024 பிப்ரவரி 10, வரையிலான நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 17.30 சதவீதம் அதிகமாகும். திரும்பப் பெறப்பட்ட தொகைக்குப் பின் நிகர நேரடி வரி வருவாய் ரூ. 15.60 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 20.25 சதவீதம் அதிகமாகும். இது 2023-24 நிதியாண்டுக்கான நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 80.23 சதவீதம் ஆகும்.

கார்ப்பரேட் வருமான வரி எனப்படும் சிஐடி மற்றும் தனிநபர் வருமான வரி எனப்படும் பிஐடி ஆகியவற்றின் மொத்த வருவாய் வசூலும் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. சிஐடி வளர்ச்சி விகிதம் 9.16 சதவீதம் ஆகவும், பிஐடி மட்டும் 25.67 சதவீதமும், எஸ்டிடி உட்பட பிஐடி 25.93 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. பணத்தைத் திரும்பப்பெறுதல் சரிசெய்யப்பட்ட பிறகு, சிஐடி வசூலில் நிகர வளர்ச்சி 13.57 சதவீதம் ஆகும்.

பிஐடி வசூலில் 26.91 சதவீதமும் எஸ்டிடி உட்பட பிஐடி 27.17 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. 2023 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 10 வரை ரூ. 2.77 லட்சம் கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement