முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெவ்வேறு மாதிரியான கட்டணம் வசூல்!. குற்றச்சாட்டுகளுக்கு OLA, Uber நிறுவனங்கள் மறுப்பு!.

Different types of fare collection!. OLA, Uber deny allegations!.
08:42 AM Jan 25, 2025 IST | Kokila
Advertisement

OLA-Uber: மொபைல் போன் அடிப்படையில் வெவ்வேறு மாதிரியான கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று ஓலா, உபேர் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

Advertisement

டாக்ஸி ஓருங்கிணைப்பாளர்களாக இருக்கும் உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்த புகார்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது; வாடிக்கையாளர்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த நிறுவனங்களின் கட்டண அறிக்கைகள் தொடர்பாக, உபர், ஓலா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, அமைச்சகம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், மொபைல் மூலம் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஓலா உபேர் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான விலை கட்டமைப்பைதான் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். செல்போன்கள் அடிப்படையில் கட்டணங்களை வேறுபடுத்தவில்லை என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. இது ஒரு தவறான புரிதல்; ஆணையத்துடன் இணைந்துதான் செயல்படுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. இதேபோல், உபேரின் செய்தி தொடர்பாளரும், தொலைப்பேசி அடிப்படையில் விலையை வேறு படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

Readmore: “மனைவி, மகள்களை கவனிக்காத இந்த கொடூர நபரை நீதிமன்றத்திற்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்?”. உச்சநீதிமன்றம் காட்டம்!

Tags :
cell poneOLA-Uberrate
Advertisement
Next Article