For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'பயணம்.. வாழ்க்கையின் ஆசீர்வாதம்!' பயணங்கள் செய்வதால் நம் மனதிற்கு இத்தனை நன்மைகளா..?

Did you know that traveling has so many benefits for our mind?
03:30 PM Jan 20, 2025 IST | Mari Thangam
 பயணம்   வாழ்க்கையின் ஆசீர்வாதம்   பயணங்கள் செய்வதால் நம் மனதிற்கு இத்தனை நன்மைகளா
Advertisement

பிறப்பு முதல் இறப்பு வரையிலான அழுத்தமான பயணத்தில், வாய்ப்பு கிடைக்கும்போது சிற்சில சுகமான பயணங்களை அனுபவித்து மேற்கொள்ளுங்கள். நாள்கள் கழிந்தாலும், பயண நினைவுகள் நிகழ்காலத்தை அழகாக்கும்.

Advertisement

பயணங்கள் மனதை விரிவுபடுத்துவதாகவும், பிற ஊர்கள், நாடுகள், அங்குள்ள மக்களின் கலாச்சாரங்களை தெரிந்து கொள்வதற்குமான ஒரு அருமையான வாய்ப்பு. பயணங்கள் நமது சொந்த உலகத்தை விரிவு படுத்துகின்றன. மாதத்தில் ஒருநாள் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது அருகில் உள்ள இடங்களுக்கு குடும்பத்தினர்கள், நண்பர்கள் உடன் சென்று வருவது மனதிற்கு ஆரோக்கியத்தை தரும். சுற்றுலா சென்றுவருவதன் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

புதிய கலாச்சாரங்களை ஆராய்வது மற்றும் வெவ்வேறு மக்களின்  பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி அறிந்து கொள்வது உலகத்தைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதுடன் அங்கு வாழும் புதிய மனிதர்களை பற்றிய அறிமுகமும் கிடைக்கும். புதிய நபர்களுடன் தொடர்புகள் உருவாவதுடன் சமூக பிணைப்புகளையும் வலுப்படுத்தும்.

ஒரு சுற்றுப்பயணத்தை  நல்லபடியாக முடிப்பது என்பது வழியில் காணக்கூடிய பலவித அனுபவங்கள், சவால்கள், சிரமங்களை எதிர்கொண்டு அவற்றை மீண்டு வரும்போது ஒரு விதமான சாதனை மற்றும் பெருமை உணர்வை அளிக்கும். இது ஒருவரின் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையும் அதிகரிக்கும். மொத்தத்தில் சுற்றுப்பயணம் செல்வது நமது உடல், மனம் ஆன்மாவை உற்சாகப்படுத்தும் ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்.

உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்;

சுற்றுப்பயணங்களில், புதிய இடங்களை சுற்றி பார்க்கும் போது அடிக்கடி நடக்க வேண்டி வரும். கோயில் போன்ற இடங்கலளில் நீண்ட பிரகாரங்களை சுற்ற வேண்டும். இந்த நடைப்பயிற்சி, உடல் செயல்பாட்டின் அளவை அதிகரித்து ஆற்றலை மேம்படுத்தும்.

மலைப்பிரதேசங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது உயரமான இடங்களில் ஏறவேண்டும். பசுமையான சூழலில் சுத்தமான காற்றை அனுபவித்தபடி இயற்கை அழகு கொஞ்சும் இடங்களை பார்க்கும் போது மனதில் அமைதியை தோற்றுவித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். உடலில் ஆக்சிஜனேற்றத்தை அதிகரித்து மனச்சோர்வை குறைக்கும். உடல் புத்துணர்ச்சியுடன் திகழும்.

மன ரீதியான நன்மைகள்;

மலை, நதி போன்றவற்றின் கரையில் எங்காவது அமர்ந்து சுத்தமான காற்றை சுவாசிக்கும் போது, ​​உங்கள் மனம் அமைதியடையும். இந்த வழியில், நீங்கள் உங்கள் சொந்த பிரச்சனைகளை சிறந்த முறையில் சமாளிக்க தீர்வுகளை சிந்திக்க முடியும். பிரச்சனையிலேயே உழன்றுகொண்டு இல்லாமல் அதை வெளியில் இருந்துபார்த்து எளிமையான தீர்வை கண்டுபிடிக்க முடியும்.

இயற்கைக் காட்சிகளை கண்ணுற்றும்போது, அது வழக்கமான அலுவலகம், வீடு போன்ற சலிப்பூட்டும் நிகழ்வுகளில் இருந்து மாறுபட்டு கண்களுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தரும். புதிய அனுபவங்களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் பயணங்கள் தரும். புதிய இடங்களையும் கலாச்சாரங்களையும் ஆராய்வது ஒருவரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும். புதிய யோசனைகளைத் தூண்டும், அறிமுகம் இல்லாத சூழல்கள் மனதிற்கு ஒருவிதமான அமைதியை தரும். மனம் தெளிவாக இருக்கும் அந்த சூழ்நிலையில் வாழ்க்கையில் எடுக்க நினைத்திருக்கும் சிக்கலான பிரச்னைகளுக்கான தீர்வுகள் கூட கிடைக்கக்கூடும்.

Read more ; BREAKING | கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார வழக்கு..!! குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை..!!

Tags :
Advertisement