பெண்கள் எப்போது பிரா அணிய ஆரம்பித்தார்கள்?. என்ன காரணத்திற்காக முதன்முதலில் அணிந்தார்கள்..? அதன் வரலாறு தெரியுமா?.
Bra: பிரா பெண்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால் உலகில் பெண்கள் முதன்முதலில் பிரா அணிய ஆரம்பித்தது எங்கிருந்து தெரியுமா? அதன் பின்னணியில் உள்ள வரலாறு குறித்து தெரிந்துகொள்வோம்
பெண்களும் ஆண்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல விஷயங்களைப் பயன்படுத்துகிறார்கள், அதன் வரலாறு பல ஆண்டுகளுக்குப் பின்னால் செல்கிறது. பெண்களுக்கான இந்த விஷயங்களில் ஒன்று ப்ரா. இது பெண்களின் இயல்பான வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். இன்றைய கால கட்டத்தில் விதவிதமான நிறங்களில் இருந்து விதமான மாடல்கள் முதல் பிராக்கள் வலம் வருகின்றன. இந்த பிராக்களை எப்படி வாங்குவது எப்படி பயன்படுத்துவது எப்படி பராமரிப்பது போன்ற பல விஷயங்களை நாம் அறிந்து இருப்போம். ஆனால் இந்த பிராக்கள் எப்படி நடைமுறையில் வந்தது அதற்கு பின்னால் இன்னமும் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி ஏன் பெண்களுக்கே தெரிந்திருக்காது. ப்ரா நீண்ட மற்றும் பழைய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது உலகில் முதன்முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?.
பெண்கள் எப்போது பிரா அணிந்தார்கள்? பிராசியர் என்ற சொல் முதன்முதலில் வோக்கில் 1907 இல் குறிப்பிடப்பட்டது. இதற்கு ஆதரவு தருதல் என்று பொருள். இதுவே பின்னர் வழக்குப் பேச்சில் பிரா என்று அழைக்கப்படலானது. அறிக்கையின்படி, பிரா என்பது பிரெஞ்ச் வார்த்தையான 'பிராசியர்' என்பதன் குறுகிய வடிவமாகும், இது உடலின் மேல் பகுதியைக் குறிக்கிறது. தகவலின்படி, முதல் நவீன பிராவும் பிரான்சில் தயாரிக்கப்பட்டது. பிரான்சின் ஹெர்மின் கடோல் 1869 ஆம் ஆண்டில் ஒரு கோர்செட்டை (ஜாக்கெட் போன்ற ஆடை) இரண்டு துண்டுகளாக வெட்டி உள்ளாடைகளை உருவாக்கினார். இந்த உள்ளாடைக்கு கோர்செலெட் ஜார்ஜ் என்று பெயரிடப்பட்டது, அதன் மேல் பகுதி, ப்ரா போல விற்கப்பட்டது. இன்றும் இந்தப் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 1900 களின் முற்பகுதியில் ப்ராக்கள் ‘BustBodices’ அல்லது ‘BB’ என்று அழைக்கப்பட்டன.
வரலாற்றின் படி, எகிப்திய பெண்கள்தான் முதலில் பிரா அணிந்தனர். உண்மையில், அந்த நேரத்தில் அவரகள் தோலால் செய்யப்பட்ட ப்ராவை அணிந்திருந்தனர். கிரேக்க மற்றும் யுனானி நாகரிகங்களில் எளிய மார்பகப் பட்டை அணிவது பற்றிய குறிப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் ஆரம்பத்திலிருந்தே பெண்கள் உடலை மறைப்பதற்கு புடவையையே பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில், கி.பி முதல் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர் ஹர்ஷ்வர்தன் ஆட்சியின் போது பெண்கள் கஞ்சுகி அணிந்தனர். இது தவிர 1237ஆம் ஆண்டு பசவபுரத்தில் கஞ்சுகி பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. கஞ்சுகி என்பது பிராவின் ஒரு வடிவம் என்று நம்பப்படுகிறது. முகலாயர் காலத்தில் பெண்கள் இத்தகைய ஆடைகளை அதிகம் அணிந்துள்ளனர். இருப்பினும், இந்தியாவில் முதன்முதலில் பிரா அணிந்தவர் யார் என்பது குறித்த தகவல் இல்லை.
முதல் உலகப்போர் பிராக்களின் தலைவிதியே மாற்றியது என்றே கூறலாம். ஏனெனில் கோர்செட்டுகள் மற்றும் பிராக்களில் பயன்படுத்தப்படும் உலோகம் போருக்கான பயன்பாடுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது. எனவே பிராக்களில் பயன்படுத்தும் உலோகத்தின் அளவு குறைக்கப்பட்டது. 1930 களில், ஏ, பி, சி மற்றும் டி ஆகிய நான்கு வெவ்வேறு அளவுகளில் பிராக்கள் வந்தன. முட்டை கப், டீ கப், காபி கப் மற்றும் சேலஞ் கப் போன்ற பெயர்கள் அவைகளுக்கு வழங்கப்பட்டன. பிரா பற்றிய படிப்பை வழங்கும் ஒரு பல்கலைக்கழகம் சீனாவில் உள்ளது.
தோராயமாக ரூ. 68,000 மதிப்புள்ள ஒரு சிறப்பு ஸ்போர்ட்ஸ் ப்ரா உள்ளது. இதில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிய உதவும் ஹீட் சென்சார்களைக் தன்னுள் கொண்டுள்ளது. மேமோகிராம் செய்வதற்கு குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இது மார்பக புற்று நோயை கண்டறிய உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கிரேக்க வரலாற்றில் ப்ரா போன்ற ஆடைகளின் சித்தரிப்புகள் உள்ளன. ரோமானியப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மார்புப் பகுதியில் துணியைக் கட்டினர். இதற்கு நேர்மாறாக, கிரேக்க பெண்கள் தங்கள் மார்பகங்களை பெல்ட் மூலம் அதிகரிக்க முயற்சித்தனர். இன்று நாம் கடைகளில் பார்க்கும் ப்ராக்கள் அமெரிக்காவில் 1930 இல் தயாரிக்கத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.