”எல்லாம் பண்ணிட்டு கல்யாணம் மட்டும் கசக்குதா”..? பேசிக் கொண்டிருக்கும்போதே கத்தியால் சரமாரியாக குத்திய காதலி..!!
காதலிக்கும்போது உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணத்திற்கு ’நோ’ சொன்ன காதலனை, பேசிக்கொண்டிருக்கும்போதே காதலி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஏ.குடுகனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மனுகுமார் (25). இவர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் நிலையில், பவானி (25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி வெளியே சென்று உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக பவானியிடம் பேசுவதை மனுகுமார் தவிர்த்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான், ஜனவரி 1ஆம் தேதியான நள்ளிரவு 12.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மனுகுமாருக்கு அவரது நண்பர்கள் போன் செய்து அழைத்துள்ளனர். அப்போது, பவானியும் அங்கு வந்துள்ளார். பின்னர், இருவரும் ஒன்றாக அமர்ந்து காதல், திருமணம் குறித்தும், தன்னிடம் ஏன் பேச மறுக்கிறாய் என்றும் பவானி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், கடைசி வரை மனுகுமார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பவானி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனுகுமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்துபோன அவர், சுருண்டு கீழே விழுந்தார். பின்னர், மனுகுமாரை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பவானியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.