ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்தாரா..? அவரே கொடுத்துள்ள விளக்கத்தை பாருங்க..!!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கொடிப் பாடலை பனையூர் அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
இதற்கிடையே, நடிகர் விஜய் ராகுல் காந்தியை சந்தித்த போது காங்கிரசில் ஒரு பதவி மட்டும் கேட்டார். அதற்கு ராகுல், நீங்கள் ஒரு பெரிய நட்சத்திரம். நீங்கள் ஒரு கட்சியையே தொடங்கி பணியாற்றலாம் என்றார். அதனால் தான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார்” என்று பாஜகவை சேர்ந்த விஜயதரணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய்யின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் விஜய், “ராகுல் காந்தி தரப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இதை கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ராகுல் காந்தி என்னை மீட் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்ல. ஆனாலும், இந்த சான்ஸை மிஸ் பண்ணக் கூடாதுன்னு என் தந்தையுடன் சென்று ராகுலை சந்தித்தேன். அவர் எங்களிடம் பேசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.