"வைர நகைகள்; தங்க எம்பிராய்டரி!. 1,900 மணிநேரம் வடிமைக்கப்பட்ட புடவை"!. டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜொலித்த நீதா அம்பானி!.
Nita Ambani: இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவியும், பிரபல மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை தலைவருமான நீதா அம்பானி-யின் ஆடம்பர வாழ்க்கை குறித்து எவ்வளவு பேசினாலும் அடங்காது என்பதற்கு ஏற்ப இவருடை ஆடை அணிகலன்களின் தேர்வு இருக்கும். நீதா ஆம்பானி பயன்படுத்தும் டீ கப் முதல் அவர் பயன்படுத்தும் நகைகள், கார், உடை என அனைத்திலும் ஆடம்பரத்தின் உச்சம் இருக்கும். ஒவ்வொரு முக்கிய விழாவுக்கு வரும் போது அவருக்கு மேக்அப் போட பாலிவுட் பிரபல மேக்அப் ஆர்ட்ஸ்ட் தான் வருகிறாராம்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற ரிலையன்ஸ் குழும தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நீதாவிற்கு என பிரத்யேகமாக இந்தச் சேலையை தேசிய அளவில் விருதுபெற்ற நெசவுக்கலைஞர் கிருஷ்ணமூர்த்தி உருவாக்கியுள்ளார். இரு தலை கழுகு, மயில் உள்ளிட்ட பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையிலான வடிவமைப்புகள் இந்தச் சேலையில் இடம்பெற்றிருந்தன.
இதேபோல், டிசியில் நடந்த இரவு விருந்தில், நவீன தையல் கலையுடன் பாரம்பரிய கைவினைத்திறனைக் கலந்த ஒரு குறுகலான,காலர் ரவிக்கையுடன் அழகான கருப்பு ஜாமேவர் புடவையை அணிந்திருந்தார். புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி இந்த புடவையை வடிவமைத்துள்ளார். இந்த தங்க எம்பிராய்டரி மூலம் ஆடையை வடிவமைக்க கிட்டத்தட்ட 1, 900 மணிநேரம் ஆனதாக வடிவமைப்பாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Readmore: பெண்களே உஷார்!. ஹை ஹீல்ஸ் அணிவதால் முதுகுத் தண்டில் இத்தனை பாதிப்புகள் ஏற்படுகிறதா?.