ஆல்யா மானசாவுக்கும், சஞ்சீவுக்கும் நடந்த பிரேக் அப்; அதிர்ச்சியில் ரசிகர்கள், சஞ்சீவ் அளித்த பரபரப்பு பேட்டி..
பலரின் மனம் கவர்ந்த சீரியலில் ஒன்று ராஜா ராணி. அதே சமையம் பலருக்கு பிடித்த ஜோடி என்றால் அது சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசாவாகத்தான் இருக்க முடியும். ஒரு காலத்தில், விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் ராஜா ராணியை பிரவீன் பென்னட் இயக்கினார். இந்த சீரியலில் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். ரீல் ஜோடி ஒரு கட்டத்தில் ரியல் ஜோடியாக மாறினார்கள்.
இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமீபத்தில், இந்த தம்பதி பிரம்மாண்ட வீடு கட்டியது மட்டும் இல்லாமல், விலையுயர்ந்த கார், போட் ஹவுஸ் என அடுத்தடுத்து வாங்கினார்கள். ஜோடியாக இருவரும் முன்னேறியது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தது. அண்மையில், நடிகர் சஞ்சீவ் அளித்த பேட்டி ஒன்று, பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
அந்த பேட்டியில், அவர் கூறும் போது, அவருக்கும் ஆல்யாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நாங்கள் இருவரும் காதலிக்கும் போது, எங்களுக்குள் பெரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டது, ஆனால் அந்த பிரச்சனை பெரிய பிரளயமாக மாறியது. நடந்த பிரச்சனையில், நான் சீரியலில் நடித்தால், ஆல்யா நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதோடு நிறுத்தாமல், அவர் தனது பெற்றோரை அழைத்து வந்து பெரிய பிரச்சனை செய்து விட்டார்.
அவர் செய்த பிரச்சனையில், ராஜா ராணி சீரியலே நிற்கும் அளவிற்கு ஆகிவிட்டது. அந்த பிரச்சனையால் அவர் தொடர்ந்து அழுதுததில், அவருக்கு வீசிங் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சீரியலில் அப்போது நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை வைத்து நடிக்க வைத்து விட்டார்கள். அந்த கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுக்க என் கண்முன்னே ஆடிஷன் நடந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் ஆல்யாவே சமாதானம் ஆகிவிட்டார். பின்னர் அவரே என்னை நடிக்க சம்மதித்தார். அப்போதெல்லாம், இருவரும் வருவோம், நடிப்போம், அவரவர் அறைக்கு சென்றுவிடுவோம். எங்களுக்குள் எந்த உறவும் இல்லாமல் இருந்தது. ஒரு சில நாட்களில், ஆல்யாவே எனது நண்பர் மூலம் தூதுவிட்டு பேசினார். ஆனால் மிகப்பெரிய பிரளயமாக மாறிய இந்த பிரச்சனை ஒரு வாரத்தில் முடிந்தது" என்றார்.
Read more: “அப்பா, என்ன தொடாத பா” கெஞ்சிய 15 வயது மகள், போதையில் தந்தை செய்த கொடூரம்!!