உலர் பழங்களை இந்த நோய் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.! ஏன் தெரியுமா.!
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் நோய் தாக்கத்தில் முக்கியமான ஒன்று சர்க்கரை நோய். சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுகளில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை இருப்பவர்கள் உலர் பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
உலர் பழங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உலர் பழங்கள் விஷமாக மாறிவிடும் என்று கருதப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த வகையிலும் இனிப்பான உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது.
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது ஆனால் ஒரு சிலர் உலர் பழங்களை சாப்பிட்டு வருகின்றன. உலர் பழங்களிலும் செறிவூட்ப்பட்ட சர்க்கரை இருக்கும் என்பதால் இவற்றை சாப்பிடும் போது திடீரென்று ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரித்து உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம், உலர்ந்த அண்ணாச்சி பழம், உலர்ந்த மாம்பழம், கிரான் பெர்ரிகள் போன்ற இனிப்பு நிறைந்த பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. இந்த உலர்ந்த பழங்களை சாப்பிடும் போது சாதாரண பழங்களில் உள்ள இனிப்பின் அளவைவிட உலர்ந்த பழங்களில் அதிகமாக உள்ளதால் கண்டிப்பாக இவற்றை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.