முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பார்ம்ஹவுஸில் ஓய்வெடுக்கும் தோனி!. செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் வைரல் வீடியோ!

MS Dhoni Unwinds At Farmhouse, Enjoys Time With Dogs After IPL
06:05 AM Jun 17, 2024 IST | Kokila
Advertisement

Dhoni: ஐபிஎல் தொடருக்கு பிறகு தனது பண்ணை வீட்டில் செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் தல தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல்லில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் ஓட்டுவதில் ஆர்முடன் உள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடருக்கு பிறகு ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் தல தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு, தோனி தனது பிறந்தநாளை தனது செல்லப்பிராணிகளுடன் பண்ணை வீட்டில் கொண்டாடினார். இதேபோல், தற்போது தோனியின் மகள் ஸிவா, தந்தையர் தினத்தையொட்டி, தோனியின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது செல்லப்பிராணிகளுடன் தல தோனி கொஞ்சி மகிழ்வதை காணமுடிகிறது.அருவடன், மகள் ஸிவா, மனைவி சாக்‌ஷி ஆகியோரும் உற்சாகமாக விளையாடுகின்றனர். தல தோனி தனது பண்ணை வீட்டில் பெல்ஜியன் மாலிநாய்ஸ்(2), வெள்ளை ஹஸ்கீஸ்(2), டச்சு ஷெப்பர்டு(1), என மொத்த 5 செல்லப்பிராணிகளை வளர்த்துவருகிறார்.

இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் தோனி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தோனி, ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் உலகில் அவர் தொடர்ந்து மிகவும் மதிக்கப்பட்டு வருகிறார்.

Readmore: இதுக்கு ஒரு முடிவே இல்லையா!! ‘மனித விரலை அடுத்து ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்’ தீர்வு தான் என்ன?

Tags :
Dhoni restingfarmhousepetsviral video
Advertisement
Next Article