For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்..!! சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு..!!

Minister Duraimurugan has announced that Rs 3 crore will be given as a development fund for legislators' constituency.
03:33 PM Jun 26, 2024 IST | Chella
எம் எல் ஏ  தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ 3 கோடி வழங்கப்படும்     சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
Advertisement

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய போது, கள்ளக்குறிச்சி விவகாரத்தை முன்வைத்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய அவை முனைவர் துரைமுருகன் “பிரச்சனையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் ரூ. 2 கோடியை மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் செலவிட அனுமதி இருந்தது. மீதமுள்ள ரூ.1 கோடியை அரசு பரிந்துரைக்கும் திட்டத்திற்கு செலவிட வேண்டியிருந்தது. இனி ரூ.3 கோடி தொகுதி வளர்ச்சி நிதியையும் எம்.எல்.ஏ- க்கள் நேரடியாக திட்டங்களுக்கு செலவிடலாம்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உடல்நலத்திற்கு பணம் தேவைப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறேன். முதல்வர் அது குறித்து பேசிவிட்டு தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜி.எஸ்.டியையும் நீக்க முதல்வர் முக.ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

Read More : அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!

Tags :
Advertisement