"வடை இங்கே.. வேலை எங்கே..?.." மத்திய அரசு அறிவித்த 2 கோடி வேலைவாய்ப்புகள் குறித்து தயாநிதி மாறன் கேள்வி.!
இந்திய பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பொது தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க சிறப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது இந்த மசோதா லோக்சபாவில் ஒப்புதல் பெற்ற நிலையில் ராஜ்ய சபாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
மேலும் 2014 தேர்தலுக்கு முன்பு இருந்த பொருளாதார நிலையையும் தற்போது இருக்கும் பொருளாதார நிலையையும் ஒப்பீடு செய்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற கூட்டம் வருகின்ற 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கேள்வி எழுப்பிய தமிழக எம்பி தயாநிதிமாறன் மத்திய அரசு தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என்னானது.? ஆட்சிக்கு வந்து பத்து வருடங்கள் முடியும் நிலையில் அனைத்துமே வாக்குறுதிகளாகத் மட்டும் தான் இருக்கிறது. வடை சுடாமல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என தெரிவித்துள்ளார்.