For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு வேலையில் சேர ஆசை..!! ஆனால் கழுதை பால் மூலம் மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் நபர்..!!

10:17 AM Apr 23, 2024 IST | Chella
அரசு வேலையில் சேர ஆசை     ஆனால் கழுதை பால் மூலம் மாதம் ரூ 3 லட்சம் சம்பாதிக்கும் நபர்
Advertisement

கழுதை பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர் ஒருவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திர்ரன் சோலங்கி. இவர், தன்னுடைய கிராமத்தில் கழுதை பண்ணை வைத்துள்ளார். இதில், 42 கழுதைகள் உள்ளன. கழுதை பாலின் விலை லிட்டருக்கு ரூ.7,000 வரை விற்பனையாகிறது. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார். இதுகுறித்து சோலங்கி கூறுகையில், "நான் அரசு வேலையில் சேர நினைத்தேன். ஆனால், எனக்கு தனியார் நிறுவனத்தில் தான் வேலை கிடைத்தது. அந்த சம்பளம் என்னுடைய குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.

அப்போது தான் நான் கழுதை வளர்ப்பு பற்றி கேள்விப்பட்டு, அதற்காக ரூ.22 லட்சம் முதலீட்டில் 20 கழுதைகளுடன் ஒரு பண்ணையை தொடங்கினேன். இப்போது, என்னுடைய பண்ணையில் 42 கழுதைகள் உள்ளன. குஜராத்தில் கழுதை பாலுக்கான தேவை இல்லாததால் முதல் 5 மாதங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. பின்னர், தென்னிந்தியாவில் கழுதை பாலுக்கு தேவை அதிகமாக இருப்பதை அறிந்து கொண்டு அங்குள்ள நிறுவனங்களை அணுகி ஆர்டர் பெற்றேன்.

தற்போது, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சில அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கழுதை பாலை அனுப்பி வருகிறேன். பாலை பிரீஸர்களில் வைத்து பாதுகாக்கலாம். இதனை, உலர வைத்து தூள் வடிவிலும் விற்பனை செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Read More : சென்னை மக்களே..!! இனி வாகனம் பார்க்கிங் செய்வதில் பெரும் சிக்கல்..!! அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு..!!

Advertisement