For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

6 சிட்டிங் எம்.பி களுக்கு வாய்ப்பு மறுப்பு..! ஸ்டாலின் போடும் கணக்கு..!

02:41 PM Mar 20, 2024 IST | 1Newsnation_Admin
6 சிட்டிங் எம் பி களுக்கு வாய்ப்பு மறுப்பு    ஸ்டாலின் போடும் கணக்கு
Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 6 சிட்டிங் எம்.பிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அதற்கு பதில் புதிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது.

Advertisement

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க. கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. மேலும் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார், இந்த பட்டியலில் புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய எம்பிக்களாக இருக்கும் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூர் தொகுதியின் தற்போதைய எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு முரசொலி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சாவூர் தொகுதியில், கடந்த 6 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்பி டாக்டர் செந்திகுமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஆ.மணி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்பி கவுதம் சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மலையரசன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்பி சண்முக சுந்தரத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஈஸ்வரசாமி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்பி தனுஷ்.எம்.குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ராணி சிவக்குமார் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்பி எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு டி.எம்.செல்வகுமார் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement