For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அசத்தும் இந்தியா...! வெடிமருந்து, டார்பிடோ ஏவுகணை படகு...! கடற்படையிடம் ஒப்படைப்பு..!

09:57 AM Mar 30, 2024 IST | Vignesh
அசத்தும் இந்தியா     வெடிமருந்து   டார்பிடோ ஏவுகணை படகு     கடற்படையிடம் ஒப்படைப்பு
Advertisement

இந்தியக் கடற்படைக்காக, தானேயில் உள்ள எம்எஸ்எம்இ ஷிப்யார்ட், திருவாளர்கள் சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட, ஏசிடிசிஎம் படகு 11 திட்டத்தின் ஒரு பகுதியாக 'வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 18., மும்பையில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் (கரன்ஜா) ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

11 ஏசிடிசிஎம் படகு கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தானேவில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே 2021, மார்ச் 05 அன்று கையெழுத்தானது. இந்தப் படகுகளை சேர்ப்பது, துணைத் துறைமுகங்கள் மற்றும் வெளிப்புற துறைமுகங்களிலிருந்து வெடிபொருட்கள் / தளவாடங்கள் ஆகியவற்றை இந்தியக் கப்பற்படைக்கு கொண்டு செல்லுதல், இறக்குதல், ஆகியவற்றை எளிதாக்கும். இது இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுக் கடமைகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

இந்தப் படகுகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு,தொடர்புடைய கடற்படை விதிகள் மற்றும் இந்திய கப்பல் பதிவேட்டின் ஒழுங்குமுறைகளின் கீழ் கட்டப்பட்டவை. வடிவமைப்பு கட்டத்தில் படகின் மாதிரி சோதனை விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தித் திட்டத்தின் பெருமைமிகு அடையாளங்களாக இந்தப் படகுகள் திகழ்கின்றன.

Advertisement